சிவகங்கை அருகே அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டம் : நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடிய சாலைகள்
Sep 23 2023 5:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி
வர்த்தக சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். சிவகங்கை தலைநகராக இருந்தும் இவ்வழியாக செல்லும் ஒரு சில விரைவு ரயில்களை தவிர எர்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயில், பாண்டிச்சேரி - கன்னியாகுமரி அதி விரைவு ரயில் போன்ற பல ரயில்கள் இங்கு நின்று செல்வதில்லை. இதனால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பல்லவன் அதிவிரைவு ரயிலை இங்கிருந்து இயக்க ரயில்வே நிர்வாகத்திடம் அனைத்து வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிவகங்கை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.