தூத்துக்குடியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர கடை, வீடு, மின்கம்பங்கள் மீது மோதி விபத்து : பேருந்து மீது மோதுவதை தவிர்க்க லாரி ஓட்டுனர் முயன்ற போது விபரீதம்
Sep 23 2023 4:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில், எம் சாண்டு ஏற்றிவந்த லாரி சாலையோர கடை, வீடு மற்றும் மின்கம்பங்கள் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. தட்டப்பாறை கிராமத்தில் இருந்து டிப்பர் லாரியில் எம் சாண்ட் மணலை ஏற்றிச் சென்ற லாரி பாளையங்கோட்டை சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்து மீது மோதாமல் இருக்க லாரியை ஓட்டுனர் வேகமாக திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பங்களை சாய்த்து அருகில் இருந்த கடை மற்றும் வீட்டு முகப்பு மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் பரமகுரு மற்றும் பேருந்தில் பயணித்த பயணி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.