திருச்சி அருகே கனமழையால் 60 வீடுகளில் புகுந்த மழைநீர் : கழிவுநீர் கால்வாயை தூர்வார ஊராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை
Sep 23 2023 4:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீரம்பூர் கிராமத்தில் பெய்த கனமழையால் 60 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. துறையூர் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றிரவு சுமார் 2 மணிக்கு நேரத்திற்கு மேலாக பலத்த மழை பொழிந்தது. இதில் கீரம்பூர் கிராமம் ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 60 வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பக்கெட்டில் நீரை எடுத்து வெளியேற்ற வேண்டிய சூழ்நிலைக்கு பொதுமக்கள் ஆளாகினர். மேலும், விஷ ஜந்து கடித்து இரண்டு பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.