தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே எந்நேரமும் இடிந்து விழும் சூழலில் சமுதாயக் கூடம் : உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
Sep 23 2023 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள சமுதாயக் கூட கட்டிடத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சண்முகசுந்தரபுரத்தில், மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இந்த சமுதாயக்கூடம் உரிய முறையில் பராமரிப்பு செய்யப்படாததால் மேற்சுவர்களில் காரைகள் பெயர்ந்தும், படிக்கட்டு பகுதிகள் முற்றிலும் சேதமடைந்தும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். எனவே, கட்டிடம் இடிந்து சேதம் எதுவும் ஏற்படும் முன், அதனை சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.