தஞ்சை அருகே முன் பகையால் பூ வியாபாரி வெட்டி படுகொலை : கொலையாளிகள் இருவரை கைது செய்த போலீசார்
Sep 23 2023 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் முன் விரோதம் காரணமாக பூ வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த பூ வியாபாரியான காத்தாடி ராஜாமீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அதே தெருவை சேர்ந்த பழைய சோறு கார்த்தி மற்றும் பாக்கு வீரமணி ஆகிய இருவரிடமும் காத்தாடி ராஜாவிற்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. அந்த பகையின் காரணமாக ஏற்பட்ட மோதலில் இன்று காலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே வைத்து காத்தாடி ராஜா வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய கார்த்தி மற்றும் வீரமணியை பட்டுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.