தமிழகம் முழுவதும் 1,187 உணவங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை : 1,024 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் - 5 உணவகங்களுக்கு சீல்
Sep 23 2023 12:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்து 187 உணவங்களில், உணவு பாதுகாப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஆயிரத்து 24 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஒரே நாளில் ஆயிரத்து 187 ஹோட்டல்களில் உணவு சோதனை நடத்தி, ஆயிரத்து 24 கிலோ கெட்டுப்போன கோழி மற்றும் ஆட்டிறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், 115 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தரமற்ற உணவுகளை விநியோகம் செய்ததாக 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.