புதுக்கோட்டையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் அச்சம் : அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனை
Sep 23 2023 11:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டையில் நகர் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், நிஜாம் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நூற்றுக்கணக்கான மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சத்தோடு செல்கின்றனர். மேலும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாவதோடு, அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே, நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பதோடு, அவர்களை கடுமையாக எச்சரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.