தமிழக சுகாதாரத் துறையில் காலியாக இருக்கும் டிரைவர் காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு ஜூலை 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Jun 8 2023 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக சுகாதாரத் துறையில் காலியாக இருக்கும் 800 டிரைவர் காலி பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சுகாதாரத் துறையில் தற்காலிக அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு முன் ஆம்புலன்ஸ் டிரைவர்களாக நியமிக்கப்பட்ட நெப்போலியன், சரவணன் உள்பட 65 பேரை, பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் பணி நிரந்தரம் கோரி அளித்த விண்ணப்பங்கள் மீது அரசு எந்த முடிவும் எடுக்காமல் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.