நெல்லை அருகே மது அருந்த பணம் இல்லாததால் கோயில் உண்டியலில் திருடிய நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்
Jun 8 2023 5:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே குடிக்க பணம் இல்லாததால் கோயில் உண்டியல் பணத்தை திருடிய நபரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். விக்கிரமசிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்தாட்சியம்மன் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தங்கபாண்டி என்பவர் மது அருந்த பணம் இல்லாததால் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை திருடினார். இதனை அறிந்த அப்பகுதியினர் தங்கபாண்டியை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தங்கப்பாண்டி மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.