விருத்தாசலத்தில் பிரமோற்சவ விழாவையொட்டி வீதியுலா வந்த தேர் கவிழ்ந்து விபத்து : தேரை வடம் பிடித்த இளைஞர் காயம் - மருத்துவமனையில் சிகிச்சை
Jun 8 2023 5:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வீதி உலா வந்த தேர் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் காயமடைந்தார். விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீ ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீதி உலா வந்தார். தெற்கு பெரியார் நகரில் வீதி உலா வந்து கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த மாமரத்தில் தேர் சிக்கிக் கொண்டு திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தேரை வடம் பிடித்த நாச்சியார்பேட்டையைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் காயமடைந்தார்.