ஈரோடு அருகே சாலையில் சென்ற கார் திடீர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு : நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறை
Jun 5 2023 4:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அவிநாசியில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த கார் விஜயமங்கலம் டோல்கேட் முன்பு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவிநாசி மங்கலத்தில் ராஜலிங்கம் என்பவர், சுயம்பு கனி மெட்டல் மார்ட் என்ற பெயரில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். இந்நிலையில், வேலை நிமித்தமாக ஊழியர்களுடன் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் கார் திடீரென மளமளவென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், காரில் பயணித்த அனைவரும் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.