கோவை அருகே பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி மாணவர்கள் ஒன்றிணைந்து சார் ஆட்சியரிடம் மனு
Jun 5 2023 3:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி, மாணவர்கள் ஒன்றிணைந்து சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாச்சிபாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக இக்கிராமம் வழியே பேருந்துகள் இயக்கப்படாததால், மாணவர்கள் 4 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுமை மிகுந்த புத்தக பையுடன் நாள்தோறும் நடந்து செல்ல கடினமாக உள்ளதாகவும், சிறப்பு வகுப்புகள் முடிந்து இருள் சூழ்ந்த பாதையில் நடந்து வர வேண்டியுள்ளதாகவும் மாணவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.