திருவட்டாறு பெருமாள் கோயில் சொத்து குறித்து ஆய்வு மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு : கோயில் நகைகளை பழைய இடத்தில் வைக்கக் கோரி மனுத் தாக்கல்

Jun 2 2023 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நகைகளை, அவற்றின் பழைய இடத்தில் வைக்கக் உத்தரவிடக் கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட கோயில் இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இருந்த பல நகைகளை காணவில்லை என தங்கப்பன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணையின் போது, 1992-ஆம் ஆண்டுக்கு முன்பு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் எவ்வளவு நகைகள் இருந்தன, திருட்டு சம்பவத்திற்கு பிறகு எவ்வளவு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், கோயில் சொத்து குறித்து ஆய்வு செய்து, குமரி மாவட்ட கோயில்களின் இணை ஆணையர் பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00