செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவியிடம் பாலியல் சீண்டல் - முதுநிலை மருத்துவ மாணவர் இடைநீக்கம்
Jun 1 2023 6:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் மருத்துவ மாணவியிடம் பாலியல் சீண்டலில், ஈடுபட்ட முதுநிலை மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பிரிவில் நேற்று முன்தினம் இளநிலை மருத்துவ இறுதி ஆண்டு மாணவியிடம், முதுநிலை முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜஸ்ரீயிடம் புகார் அளித்துள்ளார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு நடத்திய விசாரணையில் புகார் உறுதியானதால் சம்பந்தப்பட்ட முதுகலை மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.