கரூர் - திருச்சிக்கு அரசு பேருந்துகள் சரிவர இயக்கப்படாததாக புகார் : கூடுதல் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை
Jun 1 2023 6:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் - திருச்சிக்கு அரசு பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கரூரிலிருந்து புலியூர், மாயனுர், கிருஷ்ணாராயபுரம், லாலாபேட்டை வழியாக திருச்சிக்கு செல்லும் வழியில் சரிவர பேருந்துகள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.