வாக்கு கேட்டு மட்டுமே வந்தார், அதிகாரிகளின் கொடுமையை தடுக்க வரவில்லை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சேப்பாக்கம் தொகுதி மக்கள் குற்றச்சாட்டு
Jun 1 2023 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உதயநிதி ஸ்டாலின் வாக்கு கேட்டு மட்டுமே வந்தார், அதிகாரிகளின் கொடுமையை தடுக்க வரவில்லை என்று சேப்பாக்கம் தொகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் தொகுதி லாக் நகர் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயை தூய்மைப்படுத்துவதாக கூறி 5 தலைமுறையாக குடியிருக்கும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், 40 கிலோ மீட்டர் தொலைவில் வீடு வழங்குவதாகக் கூறி, மாநகராட்சி, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பொதுபணித்துறை அதிகாரிகள் பயோ மெட்ரிக் எடுக்க மக்களை கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் லாக்நகர் பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.