குழந்தைகள் விழுங்கிய ஊக்கு, சாவிகள் அறுவைசிகிச்சையின்றி அகற்றம் : அறுவை சிகிச்சையின்றி அகற்றி மதுரை அரசு மருத்துவர்கள் சாதனை
Jun 1 2023 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குழந்தைகள் விழுங்கிய ஊக்குகளை அறுவை சிகிச்சையின்றி அகற்றி மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மானாமதுரையை சேர்ந்த அகல்யா-ரவிச்சந்திரன் தம்பதியரின் இரண்டரை வயது ஆண் குழந்தையும், தூத்துக்குடியை சேர்ந்த சாரா-பெனியல் ஜெபராஜ் தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் ஊக்கை விழுங்கியதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவ்விரு குழந்தைகளுக்கும் எந்தவித அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளாமல் எண்டாஸ்கோப்பி மூலம் ஊக்கை அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.