விழுப்புரம் கைலாசநாதர் கோயிலில் 20-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு : ராஜராஜ சோழன், பாண்டியர், சம்புவராயர் காலத்து கல்வெட்டுக்கள் என தகவல்
Jun 1 2023 3:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் கைலாசநாதர் கோயிலில் நடைபெற்ற கள ஆய்வில் 20-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விழுப்புரத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயிலில் தொல்லியல் துறை சார்பில் கள ஆய்வு நடைபெற்று வருகிறது. இதில், கருவறைக்கு அருகே மண்ணால் மூடப்பட்ட சுரங்க அறையில் 20-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இருப்பதை கண்டு ஆய்வாளர்கள் திகைப்படைந்தனர். கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகள் அனைத்தும், ராஜராஜ சோழன், பாண்டியர், சம்புவராயர் காலத்து கல்வெட்டுக்கள் என்றும், இதன்மூலம் ராஜராஜ சோழன் ஆட்சி காலத்திலேயே கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.