அறநிலையத்துறை இணை ஆணையர் பொறுப்பை நீதிபதியிடம் கொடுங்கள் : ஒரே மாதத்தில் கோயில்களில் மாற்றங்கள் நிகழும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து
Mar 30 2023 5:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பொறுப்பை நீதிபதி ஒருவரிடம் கொடுத்து பாருங்கள் தமிழ்நாடு கோயில்களில் ஏற்படும் மாற்றங்களை ஒரு மாதத்தில் பார்க்க முடியும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்திருக்கிறது. விளாத்திகுளத்தைச் சேர்ந்த கணேசன் தாக்கல் செய்த மனுவில், விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலை திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுடன் இணைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, கோயில் வருமானம் குறைவாக இருப்பதால் அதனை துணைக் கோயிலாக கருதி இணைத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களின் பட்டியல் உள்ளிட்ட புள்ளி விபரங்களுடன் அறிக்கையையும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த திட்ட அறிக்கையையும் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.