கன்னியாகுமரியில் திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி மணமகளின் தாயார் பலி : சோகத்தால் முடங்கிய மணப்பெண்ணுக்‍கு திருமணம் செய்து வைத்த உறவினர்கள்

Mar 27 2023 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அருகே, திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி, மணமகளின் தாயார் உயிரிழந்த சம்பவம் பெரும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழ பெரு விளை ஊரை சேர்ந்த சண்முகவேல்-சாந்தி தம்பதியின் மூத்த மகள் பொன் பிரதீஷாவுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரது திருமணம் இன்று ஆசாரிப்பள்ளத்தில் நடைபெறவிருந்த நிலையில், பொன் பிரதீஷாவின் தாயார் சாந்தி, திருமண வேலைகளை கவனித்து வந்தார். நேற்று கிரைண்டரில் மாவு அரைத்துக்‍ கொண்டிருக்‍கும்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்‍கியதில் சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் திருமண வீடு துக்‍க வீடாக மாறியது. பொன் பிரதீஷாவின் திருமணமும் நடைபெறுமா? என்ற கேள்விக்‍குறியும் எழுந்தது. இந்நிலையில், துக்‍கத்தால் உறவினர்கள் முடங்காமல், நேற்று சாந்தியின் உடலை அடக்‍கம் செய்துவிட்டு, பொன் பிரதீஷாவின் திருமணத்தை இன்று நிச்சயித்தபடி நடத்தி முடித்தனர். திருமணமான தம்பதிக்‍‍கு ஊர் மக்கள் ஆறுதல் கூறியதுடன், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00