சேலத்தில் நான்கு வயது பேத்தியை கழுத்தை நெரித்து கொலை செய்த பாட்டி - மனநலம் பாதிக்கப்பட்ட பாட்டியிடம் இருந்து மற்றொரு குழந்தை உயிருடன் மீட்பு
Feb 4 2023 2:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலத்தில் நான்கு வயது பேத்தியை, மனநலம் பாதிக்கப்பட்ட பாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்தார். சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த விமல்குமார் - மேகலா. தம்பதிக்கு 4 வயதில் மதுப்பிரித்திகா என்ற பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் மதுப்பிருத்திகா இருந்த அறைக்கு சென்ற பாட்டி சாந்தி, கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டுக் கொண்டார். சந்தேகமடைந்த மேகலா சத்தம் போட்டு கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சுயநினைவின்றி இருந்த மதுப்பிருத்திகாவை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மதுப்பிருத்திகா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பாட்டி சாந்தி கடந்த 6 மாதமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், குழந்தை மதுப்பிருத்திகாவை சாந்தி கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளதும் தெரியவந்தது.