தூத்துக்குடியில் 4 நாட்களுக்கு பின் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் - 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு, விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள்
Feb 4 2023 2:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் நான்கு நாட்களுக்கு பின் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பலத்த மழையுடன் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்தது. இதனால், கடந்த 4 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது இயல்பு நிலை திரும்பியதை அடுத்து நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.