திருச்சியில் தொடர்ந்து 3வது நாளாக விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Feb 4 2023 2:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் தொடர்ந்து 3வது நாளாக விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருச்சியில் பல இடங்களில் விட்டு விட்டு லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, 3வது நாளாக ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், ஏர்போர்ட், சோமரசம்பேட்டை, மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வோரும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.