தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த சூறை காற்று எச்சரிக்கை - கடலுக்கு செல்லாத மீனவர்கள்
Feb 4 2023 2:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையை ஒட்டி வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை அருகே கடந்த ஒன்றாம் தேதி இரவு கரையை கடந்தாலும் தென் தமிழக கடலோர பகுதிகளில் அதன் தாக்கம் தொடர்கிறது. மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த சூறை காற்று வீசும் என்ற எச்சரிக்கை தொடர்வதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்ன முட்டம், குளச்சல், தேங்காய்ப்பட்டிணம் ஆகிய மீன் பிடி துறைமுகங்களில் இருந்து இன்று 5-வது நாளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைபடகுகளும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் மீன் பிடிக்க செல்லவில்லை. 5 நாட்களாக மீன் பிடி தொழில் இல்லாததால் மீனவர்களுக்கு பல கோடி ருபாய்க்கு வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளது.