கோவை மாவட்ட வனப்பகுதியில் உடல்நலக்குறைவு காரணமாக பெண் யானை உயிரிழப்பு - யானையின் சில உடல் பாகங்களை பரிசோதனை கூடத்திற்கு அனுப்ப வனத்துறை முடிவு
Feb 4 2023 1:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்ட வனப்பகுதியில் காட்டு யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீலாம்பதி வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மலைவாழ் மக்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். வனத்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது ஒரு பெண் யானை உயிரிழந்த நிலையில் கிடப்பது கண்டறியப்பட்டது.உயிரிழந்த பெண் யானையின் உடலை உடற்கூறு செய்தனர்.இதில் இறந்த யானைக்கு இருபது வயதிற்குள் இருக்கலாம் என்றும் உடல் நலக்குறைவு காரணமாக பல நாட்கள் உணவு எடுத்து கொள்ளாமல் இருந்ததும் கண்டறியப்பட்டது. யானையின் உடலில் இருந்து சில பாகங்கள் சேகரிக்கபட்டு பரிசோதனை கூடத்தில் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் இதன் பின்னரே யானையின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.