தன் குழந்தைகளுக்கு நோ காஸ்ட் சான்றிதழ் வாங்க நீதிமன்றம் வரை சென்றும் அது முடியவில்லை : பிரபல இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு
Feb 4 2023 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தன் குழந்தைகளுக்கு நோ காஸ்ட் சான்றிதழ் வாங்க நீதிமன்றம் வரை சென்றும் அது முடியவில்லை என பிரபல இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை என்னும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டு, உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என்றார். ஆனால் தேவைபடும் இடங்களில் சாதி சான்றிதழை பயன்படுத்தி தான் ஆக வேண்டும் என்றும், அதற்காக முழுமையாக அதனை தூக்கி போட்டுவிட முடியாது எனவும் தெரிவித்தார்.