ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு 2 கம்பெனி மத்தியப்படை பாதுகாப்பு : தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு
Feb 4 2023 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். பிப்ரவரி 13-ம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 2ம் தேதி வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக 2 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவித்தார். முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளராக சிக்கிமை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் யாதவும், காவல் பார்வையாளராக மேற்குவங்க ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.