பேரறிஞர் அண்ணாவின் 54-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மெரினாவில் அண்ணா நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்துகிறார் புரட்சித்தாய் சின்னம்மா - மலரஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்கும் நிகழ்வில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களும், ஜாதிமத பேதமின்றி பங்கேற்க வேண்டும் என அழைப்பு

Jan 31 2023 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

பேரறிஞர் அண்ணாவின் 54ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் அஞ்சலி செலுத்துகிறார்.

அஇஅதிமுக முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர், தனது பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றலால் தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர், எண்ணற்றதமிழர்களின் வாழ்வில் எந்நாளும் நீக்கமற நிறைந்திருப்பவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா கடைபிடித்து வந்த ஒப்பற்ற கொள்கைகளைப் பின்பற்றி, அதேவழியில் நாமும் தொடர்ந்து பயணித்திட, அவர்களது நினைவு நாளான வரும் பிப்ரவரி 3ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கழகத்தொண்டர்களோடு சேர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்களும், புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் பாசமிகு தொண்டர்களும், கழக நிர்வாகிகளும், பெண்கள், இளம் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்களும், ஜாதிமத பேதமின்றி, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக, அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00