சென்னை புளியந்தோப்பில், கஞ்சா போதையில் சலூன் கடைக்குள் புகுந்து மாமூல் கேட்டு மிரட்டும் ரவுடி - நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார்
Dec 2 2022 8:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை புளியந்தோப்பில் சலூன் கடைக்குள் புகுந்து மாமூல் கேட்டு மிரட்டும் ரவுடி மீது நடவடிக்கை கோரி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சத்தியபாலன் என்பவர் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் சலூன் கடை வைத்துள்ளார். இந்தநிலையில் கே.எம்.கார்டன் பகுதியை சார்ந்த பாக்ஸர் பிரசாந்த் என்ற ரவுடி கஞ்சா போதையில் கடைக்குள் வந்து மாமூல் கேட்டு தகராறு செய்து கடை ஊழியர் ராகேசை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளுடன் சத்தியநாதன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.