பெரம்பலூர் தபால் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த வெளிநாட்டவர்கள் இருவர் கைது - கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்களா அல்லது பயங்கரவாத அமைப்பில் தொடர்புடையவர்களா என போலீசார் விசாரணை
Dec 2 2022 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூர் அருகே தபால் நிலையத்திற்குள் நுழைந்து இந்திய பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட ஈரான் நாட்டை சேர்ந்த இருவரை பிடித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குன்னம் மற்றும் சித்தளி கிராமத்தில் செயல்பட்டு வரும் தபால் நிலையங்களுக்குள் நுழைந்த இருவரும், பணியில் இருந்த பெண்ணிடம் இங்கிலாந்து பவுண்டு உள்ளது அதற்கு இந்தியா பணம் தர முடியுமா என்று கேட்டுள்ளனர். அதற்கு அங்கு பணியில் இருந்த பெண் மறுக்கவே அங்கிருந்து நழுவி விட்டனர். பின்னர் பெரம்பலூர் அரியலூர் சாலையில் பூச்செடி விற்கும் கடையில் இந்திய பணம் கேட்டு தகராறு செய்து கொண்டிருந்த இருவரையும் பிடித்த போலிசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது பாஸ்போர்ட் காலாவதி ஆகியதும் தெரிய வந்துள்ளது.