திருச்சி: திருவெறும்பூரில் பத்திரப் பதிவுக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் கையும் களவுமாக கைது
Dec 1 2022 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில், பத்திரப் பதிவுக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். காட்டூர் பாப்பா குறிச்சியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அசோக்குமார் என்பவர், பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை வாங்க முடிவு செய்துள்ளார். அதன்பேரில், திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் மேற்படி நிலத்தை பத்திர பதிவு செய்ய அணுகியுள்ளார். அப்போது, சார்பதிவாளர் பாஸ்கரன் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் அளித்த புகாரின்பேரில், , அசோக்குமாரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தை சார்பதிவாளர் பாஸ்கரன் பெற்றபோது, கையும் களவுமாக பிடிபட்டார்.