ராணிப்பேட்டை: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஈச்சர் வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து
Dec 1 2022 5:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராணிப்பேட்டை மாவட்டம் செய்யார் - திண்டிவனம் செல்லும் சாலையில், ஈச்சர் வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய வாகன ஓட்டுநர், ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆற்காடு நகர போலீசார், ஈச்சர் வேனை, கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விபத்து காரணமாக ஆற்காடு செய்யாறு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.