தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் 6 அடி நீளமுள்ள உடும்பு விழுந்தததால் சுற்றுலாப் பயணிகள் ஓட்டம்
Nov 25 2022 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் 6 அடி நீளமுள்ள உடும்பு விழுந்தததால், குளித்துக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் ஆறடி நீளமுள்ள உடும்பு விழுந்ததால், அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடும்பை மீட்டு காட்டுக்குள் விட்டனர்.