தேனி: பள்ளிக்குள் சென்று சிறுமியை கடத்திய இருவர் - தடுக்க வந்த ஆசிரியர்கள் மீது தாக்குதல்
Nov 25 2022 4:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி அருகே பள்ளிக்குள் சென்று 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை இருவர் கடத்தி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநரான அப்துல் சர்தாரின் மனைவி பர்வீன் பாணு கடந்த நான்கு மாதங்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். இதனால் இவர்களது 8 வயது மகள், சின்னமனூர் பகுதியில் உள்ள பெரியம்மாவின் பராமரிப்பில் இருக்கிறார். இதனிடையே 8 வயது சிறுமி பள்ளியில் இருந்தபோது, அங்கு வந்த இரண்டு இளைஞர்கள், குழந்தையை கடத்தி சென்றனர். இதனை தடுத்த ஆசிரியர்களையும் அவர்கள் தாக்கினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தை கடத்தப்பட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.