விழுப்புரம்: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கு - ஒய்வு பெற்ற டிஜிபி ஆஜராகி சாட்சியம்
Nov 25 2022 4:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒய்வு பெற்ற காவல்துறை டிஜிபி திரிபாதி நேரில் ஆஜராகி சாட்சி அளித்தார். சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்பி ஒருவர் புகார் கூறியிருந்தார். இதனையடுத்து புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பு சாட்சிகளில் ஒருவரான ஓய்வு பெற்ற காவல்துறை டிஜிபி திரிபாதி அளித்த சாட்சியங்களை, நீதிபதி புஷ்பராணி பதிவு செய்தார்.