பெண் மனுதாரரிடம் பண்பற்ற முறையில் வழக்‍கறிஞர் கேள்வி எழுப்பிய விவகாரம் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்‍கரவர்த்தி மன்னிப்பு கோரினார்

Nov 25 2022 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

வழக்கின் குறுக்கு விசாரணையின் போது, பெண் மனுதாரரிடம், பண்பற்ற முறையில் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியதற்கு சென்னை உயர் நீதிமன்றம் மன்னிப்பு கோரியுள்ளது. தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில், பாகப்பிரிவினை தொடர்பான வழக்கில், குறுக்கு விசாரணையின் போது, இரண்டாவது மனைவியின் மகன் தரப்பு வழக்கறிஞர், 3 பெண்களின் தந்தை மீதான உரிமை குறித்தும், அவர்களின் தாயை அவமதிக்கும் வகையிலும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்‍கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்‍கரவர்த்தி, நீதிமன்றத்திலேயே இந்த விவகாரம் நடைபெற்றுள்ளதை சுட்டிக்‍காட்டி அதற்காக இந்த நீதிமன்றம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக்கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00