கன்னியாகுமரி: சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகைகள் எதிரொலி - பூக்‍கள் விலை பல மடங்கு உயர்வு

Oct 3 2022 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகள் வருவதாலும், வரத்து குறைவு காரணமாகவும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பூக்‍களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விழாக்களை முன்னிட்டு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையான பிச்சிப்பூ ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழை காரணமாக பூக்கள் வரத்து குறைவால் பண்டிகை கால தேவை அதிகரிப்பால் 3 மடங்காக விலை உயர்ந்துள்ளது. ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு இன்று மட்டும் 100 டன்னுக்கு மேல் பூக்கள் வந்து குவிந்து உள்ளன. மல்லிகைப்பூ நேற்று கிலோ 700 ரூபாய்க்‍கு விற்பனையான நிலையில் அதுவும் இன்று ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையாகிறது. தாமரைப்பூ 20 ரூபாய்க்‍கும், செவ்வந்திப்பூ 250 ரூபாய், ரோஜாப்பூ 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்கள் தேவை அதிகரிப்பு காரணமாக பூக்கள் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர். நாளை பூக்‍களின் விலை மேலும் விலை உயரும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00