ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்‍கள் வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமையோடு வாழ வேண்டும் - அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

Oct 3 2022 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்‍கள் அனைவரும், வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமையோடு வாழ, வாழ்த்துவதாக, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இன்று வெளியிட்டுள்ள ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துச் செய்தியில், அன்னை அம்பிகையின் அருள்பெற, நவராத்திரி எனப்படும் 9 திருநாட்களின் இறுதியில் 9-வது நாளான ஆயுதபூஜை மற்றும் 10-வது நாளான விஜயதசமி திருநாட்களை பக்‍தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்‍கள் அனைவருக்‍கும் தனது இதயம் கனிந்த இனிய ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாகக்‍ குறிப்பிட்டுள்ளார்.

அழிவு இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும், மன உறுதியோடு துணிவையும் தரும் மலைமகளையும், செல்வங்களை அள்ளித் தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும் -

ஜாதி, மதங்களைக்‍ கடந்து 'செய்யும் தொழிலே தெய்வம்' என்னும் தாரக மந்திரத்தை மனதில் வைத்து, தாங்கள் செய்கின்ற தொழிலில் வெற்றி பெற்றிட, மக்‍கள், அன்னையின் அருள் வேண்டி ஆயுதபூஜையன்று பக்‍தியோடு வழிபடுகின்றனர் - அதாவது, தங்கள் வீடு மற்றும் தொழில் செய்கின்ற இடங்களை சுத்தம் செய்து, மாவிலை தோரணங்கள் கட்டி, தங்களது வாகனங்கள், தொழிலுக்‍கு ஆதாரமாக விளங்குகின்ற தொழிற் கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைப்படுத்தி, சந்தனம், குங்குமமிட்டு அவற்றை இறை பொருளாகக்‍ கருதி வழிபடும் நன்னாள் ஆயுத பூஜை திருநாளாகும் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, நவராத்திரி பண்டிகையின் 10-ம் நாளான விஜயதசமி திருநாளில் நாம் தொடங்கிடும் நற்காரியங்கள் எல்லாம் வெற்றியடையும் என்ற நம்பிக்‍கை கொண்டு மக்‍கள் அனைவரும் அன்னை மகாசக்‍தியை வணங்கி கல்வி, கலை, தொழில் மற்றும் புதிய முயற்சிகளை ஆரம்பித்து விஜயதசமி திருநாளை மிகவும் சிறப்புடன் கொண்டாடி மகிழ்கிறார்கள் என சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்‍கள் அனைவரும், வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமையோடு வாழ்ந்து, அனைவரும் வளமும், நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் சிறந்து விளங்கிட தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்‍கிக்‍ கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00