தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வனவேங்கைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

Sep 22 2022 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வனவேங்கைகள் கட்சி சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வனவேங்கை கட்சி சார்பாக, நரிக்குறவர் என்னும் ஜாதிப் பெயரில் குறவர் சொல்லை நீக்கிடக்கோரியும், வட மாநிலத்தைச் சேர்ந்த மக்களால் வக்ரா போக்லி குருவிக்காரர் என உண்மையான ஜாதிப் பெயரைக் கொண்ட மக்களை குறவர் ஜாதி பெயரை இணைத்து பழங்குடியின பட்டியலில் நரிக்குறவர் என்று சேர்க்க மத்திய அமைச்சரவை அளித்த ஒப்புதலை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே, வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேனி - மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தள்ளுமுள்ளு மோதல் முற்றியதால் ஏடிஎஸ்பி விவேகானந்தர் தலைமையில் போராட்டக்காரர்களை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00