நீலகிரியில் மழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை தமிழக அரசு உடனடியாக சரிசெய்ய வேண்டும் - அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

Aug 14 2022 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் மசினகுடி - கூடலூர் நெடுஞ்சாலையில், மழை வெள்ளத்தால் சேதமடைந்த தரைப்பாலத்தை தமிழக அரசு உடனடியாக சரிசெய்ய வேண்டுமென, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். பால், காய்கறி, மளிகை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்‍கையில், நீலகிரியில் பெய்த கனமழையின்போது மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் மசினகுடி - கூடலூர் நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலம் உடைப்பு ஏற்பட்டு, அது இன்னும் சரிசெய்ய இயலாமல் ஒரு வார காலமாக மசினகுடியில் உள்ள மக்‍கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அன்றாடம் தேவைப்படும் பால், காய்கறி, மளிகை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது - மருத்துவமனை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்‍கு செல்வதற்குக்‍கூட மாற்று வழியில் தற்போது 100 கிலோமீட்டருக்‍கு மேல் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் மிகவும் துன்பப்படுகின்றனர் - அவர்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

பைக்காரா, கிளன்மார்கன் அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால், தரைப்பாலத்தை சீரமைக்‍கும் பணியையும் செய்ய முடியவில்லை என்று சொல்லப்படுகிறது - இந்தச் சூழ்நிலையில் பாதிக்‍கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்‍களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு அப்பகுதி மக்‍களுக்‍கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை, அவர்கள் வசிக்‍கும் இடத்திலேயே சிரமமின்றி கிடைப்பதற்கு உரிய நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் - அதேபோன்று, உடைப்பு ஏற்பட்டுள்ள தரைப்பாலம் சரிசெய்யப்படும் வரை, போர்க்‍கால அடிப்படையில் அப்பகுதி மக்‍கள் சென்று வர இருசக்‍கர வாகனங்களைப் பயன்படுத்தும் வகையிலாவது தற்காலிக பாலம் அமைத்து தர விரைந்து நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்று தமிழக அரசை புரட்சித்தாய் சின்னம்மா கேட்டுக்‍கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00