சென்னை வங்கிக்கொள்ளையில் தொடர்புடையவர்களை பிடித்து கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு - காவல்துறை அறிவிப்பு

Aug 14 2022 4:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான கூடுதல் தகவல்களை வழங்குவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் உள்ள தனியார் வங்கியில், பிற்பகலில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த காவலாளிக்‍கு குளிர்பானத்தில் மயக்‍க மருந்து கலந்துகொடுத்து, வங்கிக்‍குள் நுழைந்தனர். அங்கிருந்த ஊழியர்களை கட்டிப்போட்டு, லாக்‍கரை உடைத்து, 32 கிலோ தங்க நகைகளை பட்டப்பகலில் கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளையடிக்‍க வந்த 3 நபர்களில் ஒருவர் அந்நிறுவன ஊழியராக பணியாற்றும் முருகன் என்பது விசாரணையில் தெரியவந்தது. முருகனின் தாயார் ஆதிலட்சுமி, உறவினர் கோட்டி உள்ளிட்டோரிடம் காவல்துறையினர் நேற்றிரவு முதல் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சக்‍திவேல் என்ற பாலாஜியை சென்னை பள்ளிக்‍கரணையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளை கும்பல் தலைவன் முருகன் திருவண்ணாமலை மாவட்டத்தில் பதுங்கியருப்பதாக தெரியவந்தது. இதன் அடிப்படையில், திருவண்ணாமலைக்கு தனிப்படை போலீசார் சென்றுள்ளனர்.

இதனிடையே, கொள்ளை வழக்‍கில் துரித விசாரணை நடத்தும் காவலர்களுக்‍கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என அறிவிக்‍கப்பட்ட நிலையில், இந்த குற்றச்சம்பவம் குறித்து நம்பத்தகுந்த தகவல் தரும் பொதுமக்‍களுக்‍கும், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என, டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். தகவல் தரும் பொதுமக்‍களின் விவரங்கள் ரகசியம் காக்‍கப்படும் என தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00