நடுக்‍கடலில் மீன்பிடித்தபோது பலத்த சூறைக்‍காற்றில் சிக்‍கி மாயமான ராமநாதபுரம் மீனவர்கள் - தேடுதல் வேட்டைக்குப் பிறகு 2 மீனவர்களின் உடல்கள் மீட்பு

Jul 3 2022 2:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடுக்‍கடலில் மீன்பிடித்தபோது பலத்த சூறைக்‍காற்றில் சிக்‍கி மாயமான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 2 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஏர்வாடி அருகே மங்களேஸ்வரி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இடமுருகை தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பலத்த காற்றின் காரணமாக அவர்களது படகு கவிழ்ந்தது. இதில் மலைச்செல்வம், முனியசாமி ஆகிய இருவர் கடலில் மூழ்கி மாயமாகினர். இதையடுத்து மரைன் போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில், முனியசாமி மற்றும் மலைச்செல்வம் ஆகிய இருவரின் உடல்களை மரைன் போலீசாரின் உதவியுடன் அப்பகுதி மீனவர்கள் கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இருவரது உடல்களை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். படகு கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00