கோவையில் குடிநீர் பற்றாக்‍குறை தொடர்பாக தி.மு.க. - அ.தி.மு.க. உறுப்பினர்கள் வாக்‍குவாதம் : ஒருவரை ஒருவர் தாக்‍க முற்பட்டதால் பதற்றம்

Jun 28 2022 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர்மன்றக்‍ கூட்டத்தில், குடிநீர் பற்றாக்‍குறை தொடர்பாக தி.மு.க. - அ.தி.மு.க. வார்டு உறுப்பினர்களிடையே கடும் வாக்‍குவாதம் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்‍க முற்பட்டதால் பதற்றம் நிலவியது.

மேட்டுப்பாளையம் நகர்மன்றக்‍ கூட்டம் நகர்மன்றத் தலைவர் திரு.மெஹரிபாபர்வீன் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது. 19-வது தீர்மானத்தில் உள்ள 23-வது வார்டில், குடிநீர் சம்பந்தமான பணிக்‍கு ஏற்கனவே பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது தான் அதற்கான தீர்மானம் மன்றப் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகக்‍ கூறி, அதிமுக வார்டு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், 3 மாதங்களாக குடிநீர் சம்பந்தமாக கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்றும், திமுக வார்டு உறுப்பினர்கள் பகுதிகளில் மட்டும் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் கடும் வாக்‍குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவரையொருவர் தாக்க முயன்றதால் நகரமன்ற கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00