நெல்லை திமுக எம்பி மற்றும் நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஆகியோர் எங்கே போனார்கள்? - நாங்குநேரி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் எழுதிய வாசகத்தால் பரபரப்பு
Jun 28 2022 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை திமுக எம்பி மற்றும் நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஆகியோரை எங்கே என்று கேட்டு நாங்குநேரி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் ஒருவர் எழுதிய வாசகத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பேருந்து நிலையத்தின் உள்ளே உள்ள சுவர் ஒன்றில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதில் நாங்குநேரி இங்கே எம்.பி ஞானதிரவியம் எங்கே. என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. மேலும் ரூபி மனோகரன் இங்கே தலைமை மருத்துவமனை எங்கே என்றும் குறிப்பிட்டு, இப்படிக்கு திமுக ஐயப்பன் என்று எழுதப்பட்டிருந்தது. நாங்குநேரியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்கப்படும் என்று அரசு அறிவித்த நிலையில், தற்போது இந்த மருத்துவமனை வள்ளியூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து நாங்குநேரி தொகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், திமுக பிரமுகர் எழுதிய இந்த வாசகத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.