திருப்பூர் அருகே சர்வீஸ் செய்யப்பட்ட 1 மணி நேரத்தில் வெடித்த குளிர்சாதன பெட்டி : விபத்தின்போது வெளியே நின்றதால் நல்வாய்ப்பாக உயிர்தப்பிய தம்பதி
Jun 25 2022 11:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்துக்குள்ளானதால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
உடுமலை பழனி சாலையில் உள்ள நாரயணன் காலனி பகுதியில் தண்டபாணி - கமலவேணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வாங்கிய குளிர்சாதனப் பெட்டியை இன்று சர்வீஸ் செய்துள்ளனர். சர்வீஸ் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் பயங்கர சத்தத்துடன் குளிர்சாதன பெட்டி வெடித்ததால் வீட்டில் தீப்பற்றியது. குளிர்சாதனப்பெட்டி வெடிக்கும் நேரத்தில் தண்டபாணி, கமலவேணி ஆகிய இருவரும் வீட்டிற்கு வெளியே நின்றதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிகள், பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.