சென்னை கேகே நகரில் மரம் விழுந்து வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவத்தில் அதிகாரிகளின் அலட்சியமே காரணம் : வேர் வரை மரத்தை வெட்டி விட்டு அப்படியே அஜாக்கிரதையாக விட்டதால் விபத்து நேரிட்டதாக புகார்

Jun 25 2022 11:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை கேகே நகரில் மரம் விழுந்து வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவத்தில் அதிகாரிகளின் அலட்சியமும், திட்டமின்றி செயல்பட்டதுமே காரணம் என தெரிய வந்துள்ளது.

சென்னை கேகே நகரில் கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு அருகில் இருந்த பெரிய மரம் கீழே சாய்ந்தது. அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த கார் மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில் காரில் பயணம் செய்த வங்கி மேலாளர் வாணி கபிலன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். மேலும் காரில் அவருடன் பயணம் செய்த அவரது தங்கை மற்றும் ஓட்டுநர் இருவரும் படுகாயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் விழுந்த மரத்திற்கும் கால்வாய்கும் நான்கு அடி இடைவெளி உள்ளதால் கழிவுநீர் வடிகால் பணியால் மரம் விழவில்லை என எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா தெரிவித்துள்ளார். ஆனால் கால்வாய் வெட்டியதாலேயே மரம் விழுந்துள்ளதை அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும் மறைக்க முயல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00