சென்னை அருகே பாலர் பள்ளியில் தண்ணீர் வாளிக்குள் விழுந்து பெண் குழந்தை பலி : வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை

Jun 25 2022 10:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அருகே பாலர் பள்ளியில் 9 மாத பெண் குழந்தை கழிவறை தண்ணீர் வாளிக்குள் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் தர்கா சாலை, கோபாலன் தெருவில் செயல்பட்டு வரும் தனியார் பாலர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஏஞ்சலின் ஜெயஸ்ரீ.இவர் தனது 9 மாத பெண் குழந்தையான கவிஸ்ரீ இத்திகாவை நேற்று உடன் அழைத்து வந்திருந்தார். மதியம் 12 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கழிவறைக்கு சென்று அங்கிருந்த தண்ணீர் பக்கெட்டிற்குள் விழுந்துள்ளது. குழந்தையை காணாமல் தேடிய ஆசிரியை கழிவறை பக்கெட்டிற்குள் மூச்சு பேச்சின்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் குழந்தை கவிஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தகவலறிந்து வந்த பல்லாவரம் போலீசார் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00