தமிழகத்தில் வரும் 27-ம் தேதி பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
Jun 25 2022 10:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 27ஆம் தேதி வெளியாகுமென பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே 10ஆம் தேதி தொடங்கியது. 3 ஆயிரத்து 119 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை, 8 லட்சத்து 83 ஆயிரத்து 882 பேர் எழுதினர். இதில், மாணவர்கள் 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 பேரும் அடங்குவர்.