திருவள்ளூர்: நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்தது
Jun 23 2022 6:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் அருகே, நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனம், தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுநரின் சாதுர்யத்தால் பயணிகள் உயிர்தப்பினர்.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் நோக்கி டாட்டா மேஜிக் வாகனம் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. நெமிலிச்சேரி தனியார் பெட்ரோல் பங்க் அருகே வாகனம் சென்றபோது, வாகனத்தின் முன்பக்க பகுதியிலிருந்து கரும்புகை வெளியேறியது. இதைக் கண்ட ஓட்டுநர், வாகனத்தை நிறுத்திவிட்டு பயணிகளை இறக்கினார். பின்னர் தீ மளமளவென பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் வாகனம் தீக்கிரையானது. பெட்ரோல் பங்க் அருகே தீ விபத்து நிகழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.