திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபாதை கடை வியாபாரிகள் ஆக்‍கிரமிப்பு

Jun 23 2022 6:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், நடைபாதை கடை வியாபாரிகள் ஆக்‍கிரமிப்பு காரணமாக, உழவர் சந்தையை விவசாயிகள் புறக்‍கணித்தனர். பின்னர், சாலையில் அமர்ந்து காய்கறிகளைக்‍ கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம் அண்ணா நகரில் உழவர் சந்தை, கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 70-க்கும் மேற்பட்ட கிராமங்களைச்​சேர்ந்த விவசாயிகள், உழவர் சந்தைக்கு வந்து வியாபாரத்தை தொடங்குவது வழக்‍கம். பொதுமக்‍களுக்‍கு இடையூறின்றி இவர்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், உழவர் சந்தையை சுற்றிலும் அனுமதியின்றி ஏராளமானோர் கடைகளை அமைத்து, உழவர் சந்தைக்‍கு பேருந்துகள், பொதுமக்‍கள் வர முடியாத அளவுக்‍கு ஆக்‍கிரமித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்‍கை எடுக்‍கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு செல்லாமல் புறக்கணித்த விவசாயிகள், தாராபுரம் நகராட்சி ஆண்கள் பள்ளி முன்பிருந்து, பொள்ளாச்சி சாலை ரவுண்டானா வரை கடைகளை பரப்பி வைத்து காய்கறி வியாபாரத்தை தொடங்கினர். சம்பவ இடத்திற்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்த வந்தபோது, காய்கறிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00